தமிழகத்தில் அரசுத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியத்தை வழங்குவதற்காக தமிழக அரசு ஒரு ஊதியமுறையை பின்பற்றி வந்தது. இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி, அப்போது இருந்த அதிமுக தலைமையிலான அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2009ஆம் ஆண்டில் அமல்படுத்தியது.
இந்த புதிய ஓய்வூதிய திட்டம் தான் தற்போது வரையிலும் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு போதிய அளவு பலனளிக்காததால், மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 17 வருடங்களாக அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தது.
இதனிடையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய ஓய்வூதியத்திட்டம் குறித்து அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் புதிய ஓய்வூதியத்திட்டம் தற்காலிக பணியாளர்களுக்கு பொருந்தாது. அவர்களுடைய ஊதியத்தில் பிடித்தம் செய்த பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட தொகையை திரும்பவும் ஒப்படைத்தல் சார்ந்த அறிவுரைகள் வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.