Categories
தேசிய செய்திகள்

புதிய ஊதிய விதி… மாத சம்பளம் குறைவு… அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவின் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. போறவளே போறவளே கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

அதனால் தொழிலாளர்கள் அனைவரும் மாதந்தோறும் பெரும் சம்பளத்தின் அளவு குறையும். அதனைப்போலவே புதிய நடைமுறையால் நிறுவனங்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படும். ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பே ஸ்லிப்பை எடுத்துப் பார்த்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படையின் அளவு குறைவாகவும், இதர சலுகைகள் அதிகமாகவும் இருக்கும்.

Categories

Tech |