Categories
தேசிய செய்திகள்

புதிய ஊதிய விதிமுறை… ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. ஏப்ரல் முதல் புது ரூல்ஸ்…!!!!

புதிய ஊதிய விதிமுறை ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒன்றாக இணைத்து 4 குறியீடுகளாக மாற்றியமைத்து புதிய விதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய விதி ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது என கூறப்பட்டது. ஆனால் நடைமுறை சிக்கல் காரணமாக இதனை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரியின் சம்பளத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய ஊதிய விதி  2022 முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் சார்பாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் மனிதவள மேம்பாடு மேம்பாட்டாளருடன்  ஆலோசனை நடைபெற்று வருகிறது. எல்லாம் சரியாக இருந்தால் அடுத்து வரும்2022-23 நிதியாண்டிலேயே புதிய விதி அமலுக்கு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இது பற்றி பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் போதோ ஏற்கனவே இருக்கும் விதி முறைகளில் பெரிய மாற்றம் செய்யாமல் புதிய விதிமுறை அமலுக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் ஊழியர்களுக்கான கிராசுட்டி,பிஎஃப் போன்ற அனைத்துக் சலுகைகளும்  மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் கூட இருக்காது என்பது விதிமுறை இந்த புதிய விதி அமலுக்கு வந்த பிறகு கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான புதிய பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தில் குறைக்கப்படும் என அஞ்சப்படுகிறது. ஆனால் நீண்டகால அடிப்படையில் பிஎஃப் போன்ற விஷயங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

Categories

Tech |