பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து புதுப்பிப்பதற்காக ரூ.1.64 லட்சம் கோடி நிதி ஒதுக்க நிதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தொலைத்தொடப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ரூ.1.64 லட்சம் கோடி நிதி 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும். அதாவது, ஒன்று பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவது, 2 வது நிதிநிலை அறிக்கையில் உள்ள நெருக்கடியை குறைப்பது மற்றும் 3 வது ஃபைபர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு தேவையான ஸ்பெக்ட்த்தை இந்திய அரசு ஒதுக்கீடு செய்யும். இதனையடுத்து நிதி நிலையில் உள்ள நெருக்கடியை குறைக்க ரூ.33,000 கோடி நிலுவை தொகை பங்குகளாக மாற்றப்படும். அதே தொகையிலான வங்கிக் கடன்கள் குறைந்த வட்டி பத்திரங்கள் மூலம் அடைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தை இணைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.