Categories
உலக செய்திகள்

புதிதாக பரவும் லெஜியோனேயர்ஸ்   நோய்…. 4 பேர் உயிரிழந்த பரிதாபம்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

லெஜியோனேயர்ஸ்  நோய் தொற்றால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அர்ஜென்டினா நாட்டின்  வட மேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிளினிக்கல் 4 பேர்    லெஜியோனேயர்ஸ் நோயால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் 4 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த  லெஜியோனேயர்ஸ்  நோய் என்பது பாக்டீரியாவால் உருவாகும் ஒரு நிமோனியா நோயாகும். இது முதல் முதலில் 1976-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் நடைபெற்ற  படைவீரர் குழுவின் கூட்டத்தில் தோன்றியது. இந்த பாக்டீரியா அசுத்தமான நீர் மற்றும் அசுத்தமான ஏர் கண்டிஷனிங்  அமைப்புகளில் இருந்து பரவுகிறது.

மேலும் அதே கிளினிங்கில்  அறுவகை சிகிச்சை செய்து கொண்ட 70 வயது பெண் ஒருவரும் மற்றும் 48 வயதான ஒருவர் இறந்துள்ளார். இந்நிலையில்  டுகுமான் நகரில் காய்ச்சல் பாதிப்புடன் வந்தவர்களுக்கு முதலில் கொரோனா, சளி மற்றும் ஹண்டா வைரஸ் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதன் பின்னர் நடத்திய பரிசோதனையில் அவர்களுக்கு  லெஜியோனேயர்ஸ்  பாக்டீரியா தொற்று இருப்பது உறுதியானது. இந்த தொற்று உள்ளவர்களுக்கு அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை சுகாதார மந்திரி லூயிஸ் மெடினா ரூயிஸ் கூறியதாவது. இந்த நோய் தொற்றில் நச்சு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் நிராகரிக்க முடியாதவை. அந்த மருத்துவமனையில் உள்ள ஏ.சி மற்றும் சீதோஷண  கட்டுப்பாட்டு கருவிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்றார். இதனையடுத்து டுகுமான் மாகாண  மருத்துவ கல்லூரி தலைவர் ஹெக்டர் சேல்  கூறியதாவது. இந்த பாக்டீரியா தொற்று பொதுவாக பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவுவதில்லை. மேலும் பாதிக்கப்பட்ட 11 பேருடன் நெருங்கிய தொடர்பு உள்ள எவருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |