Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகம்… ஆட்சியர் அளித்த உத்தரவு… ஆர்.டி.ஒ நேரில் ஆய்வு…!!

புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஒ மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். எனவே புதிய தாலுகா அலுவலகம் கட்ட கடந்த ஆண்டு இடம் தேர்வு செயப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இயங்க மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை ஆர்.டி.ஒ. கவுசல்யா தலைமையில் உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன், துணை தாசில்தார்கள் ஜாகீர், சுருளி முருகன், வருவாய் துறையினர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வந்த வட்ட வழங்கல், நில அளவை பிரிவு, தேர்தல் பிரிவு, இ-சேவை மைய அலுவலகம் அனைத்தும் புதிய கட்டிடத்திற்கு வழக்கம்போல செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |