மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள, பந்த்ரா கோலா காம்ப்ளக்ஸ் என்ற இடத்தில், விகேசி பிரதான சாலை மற்றும் சாந்த குரூஸ் – செம்பூர் இணைப்பு சாலைக்கிடையே மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை 4.30 மணி அளவில் மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இடிந்து விழுந்த பாலத்தின் கீழ் சிக்கியவர்களை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 13 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.