பெருமாள் கோவில் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தமிழக அரசு சார்பில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு, தேவஸ்தான போர்டு ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, தலைமை பொறியாளர் நாகேஸ்வரராவ், எம்.எல்.ஏ. மணிகண்டன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.