Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் கட்டிடம்… தவறி விழுந்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளி தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தோளூர்பட்டி கிராமத்தில் திருமுருகன் என்ற சென்ட்ரிங் தொழிலாளி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அரசலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை செய்வதற்காக திருமுருகன் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக திருமுருகன் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த திருமுருகனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருமுருகனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |