Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிதாகக் திறக்கப்பட்ட காவல்நிலையம்….. காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்….!!

புதிய காவல்நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக போக்குவரத்து காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக 83.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த காவல்நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கடந்த 10 வருடங்களில் கஞ்சா வியாபாரம் செய்தவர்களின் முழுவிவரத்தையும் பட்டியல் எடுத்துள்ளோம். இவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள்  புகார் அளிக்க  நேரடியாக காவல்நிலையத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் 7010363173 என்ற வாட்ஸ்அப் எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு இதுவரை 91 புகார்கள் வந்துள்ளது. இந்த வழக்குகளை நேரடியாக விசாரணை செய்து 11 வழக்குகளை பதிவு செய்துள்ளோம் என கூறினார்.

Categories

Tech |