பெண்ணிடம் தங்க சங்கிலி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிறைமதி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி திருடன் என கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் மர்மநபர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் ராஜா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.