வாகன சோதனையின் போது மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் முன்னிலையில் வாகன சோதனை நேற்று முன்தினம், திருச்சி மெயின் ரோட்டில் நடைப்பெற்றது. அப்பொழுது ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யும் பொழுது ஒரு மொபட்டில் புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மகேந்திரகுமார் , ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தாதகாபட்டியில் பலசரக்கு கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் 1150 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை விற்று வைத்திருந்த ஒரு லட்சத்து 650 ரொக்க பணமும் , மேலும் அவர் வந்த மொபட்டையும் கைப்பற்றியதுடன் , அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.