இன்றைய இளைய தலைமுறையினர் போதை மற்றும் புகையிலை பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். இதை சாப்பிடுவதால் பல்வேறு நோய்களும் ஏற்படும் என்பதை அறிந்தும் புகையிலையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் புகையிலை பொருட்களை கடையில் விற்ப்பதை தடை செய்து அரசு அறிவித்திருந்தாலும் சட்டவிரோதமாக விற்கப்படும் புகையிலைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 8.5 சதவீதம் இளம் வயதினர் புகையிலை பயன்படுத்துகின்றனர். இது 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவாகும். பள்ளிகள் மற்றும் வீடுகளில் தான் அதிகம் பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். கடந்த 12 மாதங்களில் 10இல் 2 பேர் புகையிலை பழக்கத்தை விட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.