சோதனை சாவடி அருகே காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வரும் யானைகள் ஆசனூர் சாலை வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து நிற்கிறது. இந்நிலையில் லாரி ஓட்டுனர்கள் சில கரும்புகளை காரப்பள்ளம் சோதனை சாவடியில் வீசி செல்கின்றனர்.
இதனால் சில காட்டு யானைகள் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே முகாமிட்டு கரும்புகளை தின்று கொண்டிருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் வாகன ஓட்டிகள் யாரும் வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.