Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் பயனில்லை…. மாணவர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை சொக்கம் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் பள்ளி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |