Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில்….. ரூ. 5 லட்சம் செலவில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட கோவில் ஆகும்.  இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் அதிகாலை 4-30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

இதனையடுத்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8-30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் ரூ.5 லட்சம் செலவில் 33 அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |