மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்க உள்ளது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, சத்சங்கம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலையில் சுமங்கலி பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது. 13-ஆம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது.
14-ஆம் தேதி நாளை (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதனையடுத்து 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.