Categories
மாநில செய்திகள்

புகழுரையை தவிர்த்து நேரடியா விஷயத்துக்கு வாங்க… அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டளை…!!!

சட்டமன்றத்தில் புகழுரைகளை தவிர்த்துவிட்டு நேரடியாக சொல்ல வேண்டிய விஷயத்திற்கு வரவேண்டுமென்று முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று சட்டப்பேரவையில் நீதிமன்ற கட்டணம் தொடர்பாக திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் முக ஸ்டாலினை வாழ்த்தி பேசினார். இதில் திடீரென்று எழுந்து குறுக்கிட்டு பேசிய முதல்வர் சட்டமன்றத்தில் புகழுரைகளை தவிர்த்துவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வர வேண்டும் என்று கூறினார். திமுக உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரு கண்டிப்பான வேண்டுகோளை விடுக்கின்றேன்.

உங்களின் உரையின்போது பதிலளிக்கும் போதும் உங்களை உருவாக்கிய ஆளாக்கியவர்களை பற்றி பேசுவது முறையாக இருக்கும். கேள்வி நேரத்துக்கும், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. நேரத்தின் அருமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்ல முடியாது. இது இங்கு இருக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் என் கட்டளை என்று அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |