தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தளபதி விஜய். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ள நிலையில் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர்.
மேலும் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே ஜி எஃப் 2 , ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வருவதால் இந்த கோடை விடுமுறை கொண்டாட்டமாகவே இருக்கும் என்று அனைவரும் தெரிவிக்கின்றனர். மேலும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.