Categories
சினிமா

“பீஸ்ட் ரிலீஸப்ப விஜய் எங்கே இருப்பாருன்னு தெரியுமா…?” வெளியான செய்தி…!!!

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நாளன்று விஜய் ஹைதராபாத்தில் இருப்பார் என கூறப்படுகின்றது.

விஜய் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

விஜய்யின் 66-வது திரைப்படத்தின் படப்பிடிப்பானது ஏப்ரல் முதல் வாரம் ஹைதராபாத்தில் துவங்க உள்ளதாக செய்தி வந்திருக்கின்றது. எனவே பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நாளன்று விஜய் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |