பிரபல தொலைக்காட்சியில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்து இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் எடுக்கக்கூடிய அளவிற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் வளர்ந்துள்ளார். முன்பாக கோலமாவு கோகிலா படத்தின் ஹீரோயினி நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் படத்தை இயக்கி வெற்றி படமாக கொடுத்தார். அப்படத்தின் வெற்றியை அடுத்து தனது நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இப்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி பல்வேறு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் விஜய் படத்திற்கு ஒரு ரசிகனாக தியேட்டரில் டிக்கெட் வாங்க காத்திருந்த நெல்சன் இப்போது விஜய்யை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதை குறித்து உணர்வுபூர்வமாக பேட்டி அளித்துள்ளார்.
அதாவது “நானும் எனது தந்தையும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்கள் ஆவர். நான் விஜய் படத்தை இயக்குவேன் என கனவிலும் கூட எண்ணிப் பார்த்ததில்லை. எனினும் அது தற்போது நடைபெற்றது. எனது தந்தை டாக்டர் படம் வெளியாகும் முன்பே இறந்து விட்டார். அவர் தற்போது இருந்திருந்தால் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். இப்போது அவர் இல்லாதது எனக்கு வேதனை அளிக்கிறது. இருப்பினும் அவர் தன்னுடைய வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பார் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது என நெல்சன் திலிப் குமார் உணர்ச்சிஉடல் தெரிவித்துள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.