பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவராக பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் ஷாக்கோ நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் மற்ற வில்லன் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.