தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளதோடு யோகி பாபு போன்ற பல திரை பிரபலங்கள் இதில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் முதல் பாடலான “அரபி குத்து” மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதையடுத்து அனிருத்தின் இசையில் விஜய் பாடிய “ஜாலியே ஜிம்கானா” பாடலும் அதிகளவு வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு நேற்று சிபிஎப்சி குழு யு/ஏ தணிக்கை சான்றிதழை வழங்கியதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து படத்தின் தணிக்கை சான்றில் இணையத்தில் கசிந்தததோடு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த சான்றிதழை அதிகளவில் தேடியதால் சிபிஎப்சி இணையதளம் முடங்கியது.