தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியானதையடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்குகின்ற “பீஸ்ட்”திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது.
இத்திரைப்படத்தின் அரபிக் குத்துப்பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வெளியான சிறிது நேரத்திலேயே 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருகின்றது. மேலும் இந்தப் பாடலானது 2 மில்லியன் லைக்ஸ் பெற்று மேலும் சாதனை படைத்திருக்கின்றது. தற்போது 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கின்றது.