வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால், திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல நடிகை மற்றும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா, ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
அதையும் மீறி சில விவகாரங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.