Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பீடா கடையில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக போதை சாக்லேட் விற்பனை செய்த 2 வடமாநில வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக போதை சாக்லேட் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு பீடா கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 20 முதல் 500 ரூபாய் வரை போதை சாக்லேட் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பீடா கடையை நடத்தி போதை சாக்லெட் விற்பனை செய்த குற்றத்திற்காக உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சோன்கர், கியாமுதீன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 3 கிலோ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |