நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் ஊஞ்சல் கட்டி ஆடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை, திருடன் போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக்கொடுத்தது . தற்போது சில தமிழ் படங்களிலும் 3 தெலுங்கு படங்களிலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச் ஒன்றில் துணியால் கட்டிய ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.