பீகார் சட்டமன்றத்திற்கான இரண்டாம் கட்ட தேர்தலில் களம் காண 34 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.
743 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் முக்கிய அரசியல் கட்சிகள் கோடீசுவர வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். வரும் நவம்பர் 3-ஆம் தேதி 94 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 1463 வேட்பாளர்களில் 495 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பிரபான பத்திரதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி வேட்பாளர்கள் 56 பேரில் 46 பேருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன.
பாஜக 39 கோடீஸ்வர வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சிராஸ் அஸ்வானின் கட்சியில் 52 பேரில் 38 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மற்ற கட்சி வேட்பாளர்களை விட காங்கிரஸ் வேட்பாளரும் மாநில பொதுச் செயலாளருமான சஞ்வு சிங் 56 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.