பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும் எனவும் பாஜக மட்டும் 85 தொகுதிகளில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் சீஓட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபைக்கு வரும் 28-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 10-ம் தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவு நவம்பர் மாதத்தில் பத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கின்றன. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் காங்கிரஸ் இடதுசாரிக் ஆகியவை ஒரு அணியிலும் உள்ளன. இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி குறித்து டைம்ஸ் நவ் ஆகியவை இணைந்து அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 10 வரை 243 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. அதில் பாஜக 85 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதாதளம் 70 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியான 76 தொகுதியில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும், வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக் ஜன சக்தி கட்சிக்கும் ஐந்து இடங்கள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.