Categories
தேசிய செய்திகள்

பீகார்: கொரோனா அதிகரிப்பு.. மே 15 வரை முழு ஊரடங்கு நீடிப்பு.. அமல்…!!

 பீகாரில் கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் மே 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கும் என அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்திய நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பீகாரில் கொரோனா 2-வது அலையாக அதிக அளவில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா நோய் பரவல் குறையாத நிலையில், முழு ஊரடங்கு வரும் மே 15-ஆம் தேதி வரை நீக்கப்படுவதாக முதல் மந்திரிநிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோய் பரவல் குறையாத காரணத்தால் ஊரடங்கு நீடிப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. பீகார் மாநிலத்தில் ஊரடங்கு நாட்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை பற்றி நெருக்கடி மேலாண்மை குழு துறை ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பீகாரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 11,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றால் நேற்று வரை 82 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பீகாரில் கொரோனா பாதித்தவர்கள் 5.09 லட்சமாக அதிகரித்துள்ளது. எனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் முழு ஊரடங்கு மே 15ஆம் தேதிக்குப் பின் தளர்த்தப்படுமா அல்லது நீடிக்குமா என்று விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.

Categories

Tech |