Categories
மாநில செய்திகள்

பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி….4 லட்சம் இழப்பீடு…. முதல்-மந்திரி இரங்கல்…!!!!!!!

பீகாரில் இடி மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் பல நகரங்களில் இடி மின்னல் தாக்கியதில் சிக்கி பல பேர் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜேபூர்  மற்றும் சரண் மாவட்டங்களில் தலா மூன்று பேரும் உயிரிழந்திருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு சாம்பிரான்  மற்றும் அராரியா  மாவட்டங்களில் தலா 2 பேரும், வங்கம் மற்றும் முசாபர்பூர் போன்ற மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 16 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பீகாரில் கடந்த 17ஆம் தேதி இடி மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி நிதிஷ்குமார் அவர்களது குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பேரிடர் மேலாண் கழகத்தின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வானிலை மோசமடைந்து உள்ள சூழ்நிலையில் மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |