மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களைக் கவர்வதற்காக பல நல்ல திட்டங்களை அளித்து வருகிறது. தற்போது ஒரு புதிய பிளானை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் டெலிகிராம் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அவ்வப்போது அறிவிக்கும். அந்த வகையில் தற்போது வருடாந்திர ரீசார்ஜ் பிளான் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதாவது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் வரம்பற்ற அழைப்புகள் பெற 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் இந்த பிளானில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் கூடுதலாக, அதாவது 395 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும். தினந்தோறும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், 395 நாட்களுக்கு பிஎஸ்என்எல், டியூன்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.