கடந்த 19 ஆம் தேதியன்று துவங்கிய பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை 2022ன் பகுதி-2 இன்று முடிவுக்கு வருகிறது. அக்டோபர் 11 -16 வரையிலான பிக் தீபாவளி விற்பனைக்குப் பின் விற்பனையின் 2ம் பகுதி பிரபலமானது. இந்த வருடம் Flipkart செப்டம்பர் 23ஆம் தேதியன்று துவங்கிய பிக் பில்லியன்டேஸ் விற்பனையின் பிறகு அடுத்தடுத்து பல்வேறு விற்பனைகளை கொண்டு வந்தது. இ-காமர்ஸ் சில்லறை விற்பனைத் தளமான பிளிப்கார்ட் பிக் தசரா சேல் மற்றும் பிக் தீபாவளி சேல் விற்பனைகளை கொண்டுவந்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.
தீபாவளி விற்பனை 2022கீழ் ப்ளிப்கார்ட் ஸ்மார்ட் போன்களின் வரம்பில் பல்வேறு தள்ளுபடிகளை அளிக்கிறது. இப்பதிவில், பிரபலமான பிரீமியம் சாதனங்களில் கிடைக்கும் சலுகைகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம். நோட்டிங் போன் 1 5G 8ஜிபி/128 ஜிபி ப்ளிப்கார்ட்டில் ரூபாய்.29,999க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. அனைத்து தள்ளுபடிகளுக்கும் பிறகு இந்த ஸ்மார்ட்போன் ரூ.26,999க்கு கிடைக்கும் என்று இ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர் வெளியிட்டிருக்கும் தீபாவளி விற்பனை விளம்பரப்பக்கத்தில் காட்டப்பட்டு இருக்கிறது.
இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு எஸ்பிஐ கிரெடிட்/டெபிட் கார்டுகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளை இணைத்த பின் இந்த குறைவான விலையில் இப்போனை வாங்கமுடியும். கூகுள் பிக்சல் 6ஏவின் 6GP/128GP மாறுபாட்டை ப்ளிப்கார்ட் ரூபாய்.34,199க்கு பட்டியலிட்டு இருக்கிறது. இப்போனை வாங்க SBI கார்டு தள்ளுபடிகள் பொருந்தும் என்பதால், 27,999 தள்ளுபடி விலையில் இதனைப் பெறலாம். இது தவிர்த்து பழைய ஸ்மார்ட் போன்களுக்கு ரூபாய்.18,500 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பையும் வங்கி வழங்குகிறது.
ப்ளிப்கார்ட்டில் 8ஜிபி/128ஜிபி ஸ்மார்ட் போனின் விலையானது ரூபாய்.35,999 ஆகும். இருந்தாலும் அனைத்து தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்திய பின் இந்த ஸ்மார்ட் போன் 32,999 ரூபாய்க்கு வாங்கமுடியும். எக்ஸ்சேஞ்ச் சலுகை அதாவது பரிமாற்ற சலுகையினை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் போனை வாங்கினால், ரூபாய்.18,500 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் பெறமுடியும். ரியல்மி ஜிடிநியோ 3டி 6GP/128GP மாறுபாட்டின் விலையானது ரூ.25,999 ஆகும். இவற்றில் ரூபாய்.5000 என்ற சிறந்த தள்ளுபடி கிடைக்கிறது.
டெபிட் மற்றும் கிரெடிட்கார்டுகளுக்கு ரூபாய்.2000 தள்ளுபடி, எஸ்பிஐ கிரெடிட்கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூபாய்.2000 வரை 10 சதவீத தள்ளுபடி உள்ளிட்ட பொருந்தக்கூடிய தள்ளுபடிகளுக்குப் பின், ஸ்மார்ட் போனின் விலையானது ரூபாய்.20,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பிளிப்கார்ட் இணையதளம் தெரிவித்து இருக்கிறது. சாம்சங்கின் மற்றொரு பிரீமியம் ஸ்மார்ட் போனான சாம்சங் காலக்சி எஸ்22 பிளஸ் 5G போனின் விலை தள்ளுபடிகளுக்குப் பின் ரூபாய்.59,999 ஆக இருக்கிறது. 8GP/128GP வகைக்கு ரூபாய்.84,999 மற்றும் 8ஜிபி/256ஜிபி மாடலுக்கு ரூபாய்.88,999 என்ற விலையில் இந்த வருடம் பிப்ரவரியில் ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டது. தீபாவளி விற்பனையின் கீழ் விலையானது 25,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.