கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்யுமாறுவிஜய் சேதுபதி வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் தொற்றில் இருந்து விடுபட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வரிசையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், “கருணையும் பச்சாதாபமும் இந்நேரத்தில் மிகவும் அவசியம். கொரோனாவிலிருந்து குணமடைந்தவராக நீங்கள் இருந்தால் தயவுசெய்து பிளாஸ்மா தானம் செய்து கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இதன் மூலம் பல உயிரை காப்பாற்ற முடியும்” என அவர் கூறியுள்ளார்.