Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பொருள் வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடையை கண்டிப்புடன் அமல்படுத்துவது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன பாதுகாப்பு தொடர்பாக வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது உதகமண்டலம் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட போதிலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தங்கள் அறிக்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை தடுப்பதாகவும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்நீலகிரி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து இதுவரை ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி ஆட்சியர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது அபராதம் மட்டுமே தீர்வாகாது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது.  மேலும் தானியங்கி குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் பழுதை சரி செய்ய ஆணை பிறப்பித்தது.

Categories

Tech |