தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது பிளாஸ்டிக் தடையை எதிர்த்த மறு ஆய்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. இதற்கிடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக ரூபாய் 36 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதையடுத்து பிளாஸ்டிக் உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.