Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவிக்கு தொற்று உறுதி… கலக்கத்தில் சக மாணவிகள்… பள்ளிக்கு விடுமுறை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று முன்தினம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அந்த மாணவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடன் படிக்கும் சக மாணவிகளும் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து மாணவியின் ஆசிரியர், அவருடன் படித்த சக மாணவிகள், ஆசிரியைகள் என 79 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் கிருமி நாசினி கொண்டு மாணவி படித்த பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த பள்ளிக்கு நேற்று முன்தினம் மதியம் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு சாவடிகள் இந்த பள்ளிக்கூடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதன் காரணமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி பள்ளி வளாகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றது.

Categories

Tech |