Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து…. பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதுமட்டுமல்லாமல் பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் கேட்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் விரிவான அறிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் சமர்ப்பித்தார். இந்நிலையில் மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார். “இந்த முடிவை தான் பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தியது. இதுபோல நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |