Categories
மாநில செய்திகள்

“பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு”….. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில், மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும்.

மாணவர் சேர்க்கை விவரங்கள், கட்டண விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவேண்டும். ஆன்லைன் மற்றூம் பதிவு கட்டணமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் ரூ.50 வசூலிக்க வேண்டும். அதேநேரம் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது.  இஸ்லாமிய பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் மறுக்கப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |