பொருளாதார வசதி குறைந்த சிறுபான்மை மாணவிகளுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப் வழங்கி வருகிறது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதுமட்டுமன்றி கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத் தேர்தல் நெருங்கிகொண்டு இருப்பதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பொருளாதார வசதி குறைந்த சிறுபான்மை (கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினர்) மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும் “மவுலானா ஆசாத் நேஷனல் ஸ்காலர்ஷிப்”கல்வி உதவித்தொகையை பெற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பிளஸ் 1 படித்து கொண்டிருக்க வேண்டும். பிளஸ் 1-ல் 6000, பிளஸ் 2ல் 6000 வழங்கப்படும். மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய www.maef.nic.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.