Categories
மாநில செய்திகள்

பிளஸ் 1 மாணவன் எடுத்த விபரீத முடிவு…. இதுதான் காரணம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருவள்ளூரில் கடம்பத்தூர் ஒன்றிய கொட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜானகிராமன்(17). இவர் பேரம்பாக்கத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதி உள்ளார். வருகின்ற 27ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியாக உள்ளது.

இதனையடுத்து தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகில் உள்ள குளக்கரைக்கு சென்ற ஜானகிராமன் அங்கு இருந்த புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |