Categories
மாநில செய்திகள்

“பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு”….. தேர்வுத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநில அளவில் 95.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும். 80.2 சதவீதம் தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான அறிவிப்பினை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உடனடித் தேர்வுக்கு வரும் 29 முதல் ஜூலை 6 வரை அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |