போளூர் தாலுகா களம்பூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போளூர் தாலுகா பகுதியில் பிளஸ்டூ மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை களம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் கவியரசன் என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது.
கார் டிரைவர் பாபு, நாகராஜன் ஆகியோர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட மாணவி அவரை கடத்திய கவிராசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.