பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் தம்பதியின் விவகாரத்திற்கு ஒரு பெண் தான் காரணம் என்று சீன சமூக ஊடகத்தில் செய்தி பரவியுள்ளது.
அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், 130 பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரருமான பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் தங்களது 27 வருட திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் அதற்கான காரணத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் சீன சமூக ஊடகமான Weibo வில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸின் தொண்டு நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த 36 வயது பெண் Zhe ‘Shelly’ Wang என்பவர் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவருக்கும் பில்கேட்ஸிற்கும் இருந்த தவறான உறவினால் தான் மெலிண்டா கேட்ஸ், தன் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டார் என்று செய்தி பரபரப்பட்டுள்ளது. ஆனால் Shelly இதனை மறுத்ததோடு, ஆதாரமற்ற இந்த வதந்தி அதுவாகவே மறைந்துவிடும் என்று தான் கருதியதாகவும், இந்த அளவிற்கு அது பரப்பப்படும் என்று தான் நினைத்து பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.