குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ்பானு என்ற 21 வயதி பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கைதான 11 பேருக்கு 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும் அம்மாநில அரசு சென்ற 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
இந்த நிலையில் குஜராத்தின் தகோத் நகரில் ரந்திக்பூர் கிராமத்தில் பில்கிஸ்பானு வீட்டின் முன்னால் சாலைக்கு எதிரில் பட்டாசு கடை ஒன்று போடப்பட்டுள்ளது. இந்த கடை பில்கிஸ்பானு பலாத்காரம் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலையில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராதேஷ்யாம் ஷா என்பவருடையது ஆகும். அதன்பின் பயத்தினால் பானு அந்த கிராமத்தில் வசிக்காமல் மாற்று இடத்திற்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் பானு அவரது வீட்டை வேறொரு இந்து பெண்ணுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
அப்பெண் வீட்டில் துணிவிற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இதனிடையில் குற்றவாளிகள் அனைவரும் கிராமத்துக்கு திரும்பிவந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இது தொடர்பாக குற்றவாளிகளில் ஒருவர் கோவிந்த் நயி என்பவர் கூறியதாவது, தாங்கள் அப்பாவிகள். எங்கே ஆவது மாமாவும், மருமகனும் ஒருவர் முன்னால் மற்றொருவர், யாரையாவது பலாத்காரத்தில் ஈடுபடும் செயலை பார்த்துள்ளீர்களா? இந்துசமூகத்தில் இப்படி நடக்குமா சொல்லுங்கள்..? இந்துக்கள் அப்படி செய்வதில்லை என தெரிவித்துள்ளார்.