பிலிப்பைன்ஸில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, தெற்கு பிலிப்பைன்ஸில் டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:41 மணியளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
மேலும் இது டாவோ ஓரியண்டல் மாகாணத்தின் தர்கோனா நகரத்திலிருந்து தென்கிழக்கே 136 கிமீ தொலைவில் 96 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை.