Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிறவி மருந்தீஸ்வரர் கோவில்…. நடைபெறும் திருவிழா….குவியும் பக்தர்கள் கூட்டம்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள்  நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு  தீபாராதனைகள் நடைபெற்றது.

அதன் பின்னர் பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |