பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாராட்டிய ரஜினி மற்றும் கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இத்திரைப்படம் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் வசூலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க எங்களை எப்போதும் ஊக்குவித்து வருகிறீர்கள் கமல் சார். அன்பையும் மரியாதையும் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்திருக்கின்றீர்கள். மேலும் ரஜினி சார் உங்கள் அழைப்பு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பிறர் உழைப்பை அங்கீகரித்து அவர்களை மனதார பாராட்டும் உங்கள் அன்பு என்னை நெகிழச் செய்கின்றது எனக் கூறியுள்ளார்.
Thank you @ikamalhaasan sir, @rajinikanth sir 🙏 pic.twitter.com/moHVnXdQQn
— Karthi (@Karthi_Offl) October 6, 2022