Categories
தேசிய செய்திகள்

பிறப்பு பதிவு கட்டாயமில்லா சான்று விநியோகம்….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

இறப்பு பிறப்பு பதிவு சட்டம் நாடு முளுவதும் 1970 க்கு பிறகு தான் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் பிறந்தவர்கள் தங்களுடைய பிறப்பை பதிவு செய்யாமலேயே இருந்துள்ளனர். அவர்களுடைய இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, பள்ளி கல்லூரி சான்று ஆகியவற்றின் அடிப்படையில் இறப்பு பதிவுக்கு மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆவணங்கள் ஏதும் இல்லாதவர்களுக்கு காவல்துறை விசாரணை மூலம் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் காவல்துறை விசாரணை மூலமாகவும் பிறப்பு குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியாதவர்களுக்கு எத்தகைய சான்று வழங்குவது என்பது குறித்து கேள்வி எழுந்தது.

இதனையடுத்து இது தொடர்பான விளக்கத்தை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார். அதன்படி 1970க்கு முன்பு பிறந்தவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு பிறப்பு பதிவு கட்டாயம் இல்லா சான்று வழங்குவதற்கான நடைமுறையை மாவட்ட பதிவாளர் வாயிலாக தலைமை பதிவாளர் மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் அதற்கு விரிவான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |