Categories
இந்திய சினிமா சினிமா

பிறந்த நாளை முன்னிட்டு 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு… நடிகர் சோனு சூட்…!!

பிரபல நடிகர்  தனது பிறந்தநாளை முன்னிட்டு குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி  கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடித்து அசத்தியவர் சோனு சூட். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால், கொரோனா ஊரடங்கு காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல, களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல் வேலையில்லாமல் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக தனது சொந்தச் செலவில், ‘பிரவாசி ரோஜ்கர்’ என்ற புதிய செயலியை உருவாக்கி இச்செயலியின் மூலம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார். சோனு சூட் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடியதை தொடர்ந்து இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |